சமீபத்தில் விக்கி விஜய் அவர்களின் வலைபதிப்பு கட்டுரைக்கு என்னுடைய பதில்
http://envijay.blogspot.in/2013/06/blog-post_14.html?showComment=1372039123357#c4769215773172417470
http://envijay.blogspot.in/2013/06/blog-post_14.html?showComment=1372039123357#c4769215773172417470
ஆம், திருநங்கைகளுக்கும், ஒர்ப்பால் ஈர்ப்பு (Gay or Lesbian) கொண்டவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அவர்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் சமூகப்பார்வை ஆகியவற்றில் நிறைய வேறுபாடு உள்ளதை நானும் ஒரு சக Gay-வாக அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பாலியல் காரணமாக சமூகத்தின் கண்களில் நாமெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களே. அவர்கள் வேறு யாருமல்ல நம் சகோதரிகளே. ஒரு கூட்டுகுடும்பத்தில் வாழும் மனிதர்கள் வித்தியாசமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அதற்காக தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று சொல்வது, ஏற்கனவே பலவீனமாய் இருக்கும் நமது சிறுபான்மை பாலினம் மேலும் பலவீனப்பட்டு நமது குரல்கள் பெருபான்மை சமூகத்தின் கண்களுக்கு தெரியாமல் போய் விடும்.
ஆம், நீங்கள் சொன்னது போல சேர்ந்தே இருப்பதால் நம் அடையாளத்தை தவறாக சமூகம் புரிந்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதை என்னால் மறுக்க முடியாது. அந்த பயம் எனக்கும் இருக்கிறது. ஆனால் காலபோக்கில் சமூகம் கண்டிப்பாக நம் அடையாளத்தை புரிந்துக் கொள்ள நேரிடும். திருநங்கைகள் விழாவாகட்டும், கூத்தாண்டவர் விழாவாகட்டும், திருநங்கைகளுக்கான உரிமைப் போராடங்களாக்கட்டும் அவர்கள் இணைந்தே போராடுகிறார்கள். நாம் அப்படியா இருக்கிறோம்? நமக்குள் தான் எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள்? கோஷ்டி சண்டையிலேயே நம்முடைய பாதி காலம் கழிந்துப்போகிறது...
நாம் அனைவரும் Gay community ஒன்றுப்பட்டால் நமக்கென போராட்டங்கள், விழாக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்க முடியும். வெளியே வந்து போராடும் Gay சமூகத்தின் எண்ணிக்கை திருநங்கைகளை விட மிகக்குறைவு தான். அந்த மிகக்குறைந்த எண்ணிக்கையே பிரிந்து நின்றால் நம்மை தனியாக அடையாள படித்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும்.
பின்குறிப்பு:-
1. சென்னை தோஸ்த் போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக Gay and Bisexual சமூகத்திற்காக மட்டும் பல நிகழ்ச்சிகள் நடத்தி வருவதையும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2. சமீபத்தில் நாங்கள் 'திருநங்கைகள் நல வாரியத்தை' 'பாலின சிறுபான்மையினர் நல வாரியமாக' மாற்ற கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். Gay , Lesbian அண்ட் 6 bisexuals இதில் சேர்க்க கோரி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் நாங்கள் பேசி வருகிறோம்.
3. சமீபத்தில் நடந்த சென்னை வானவில் திரை விழாவில் அதன் கருத்தரங்கில் Gay men - ஐ திருநங்கைகளாக ஊடகங்கள், திரைபடங்கள் மற்றும் பத்திரிக்கைகள் சித்திரிப்பதை பற்றியும் அதன் பாதிப்புகளையும் நான் பேசியிருக்கிறேன்.
அன்புடன்
விக்ராந்த் பிரசன்னா
நிறுவனர், சென்னை தோஸ்த்
ஈமெயில்: vikrantஹ@chennaidost.com
இணையதளம்: www.chennaidost.com
No comments:
Post a Comment